இந்தியாவிலேயே தனிமனிதனுக்கு பாதுகாப்பு மிகுந்த நகரங்களில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக, சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
உலக அளவில் நகரங்களில் தரத்தை மதிப்பீடு செய்து, மெர்ஸர் என சர்வதேச மனித வள மேம்பாட்டு நிறுவனம் ஒன்று ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.
இதில், மொத்தம் 221 நகரங்கள் கொண்ட 'உலகின் வாழ்க்கைத் தரம்' சிறந்து விளங்கும் நகரங்களின் பட்டியலில், இந்தியாவின் பெங்களூரு 141-வது இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, புதுடெல்லி 143-வது இடத்திலும், மும்பை 144-வது இடத்திலும், சென்னை 150-வது இடத்திலும், கொல்கத்தா 151-வது இடத்திலும் உள்ளன.
இந்த தரவரிசைப் பட்டியலில், வியன்னா, சூரிச், ஆக்லாந்து, முனிச் உள்ளிட்ட நகரங்கள் உலக அளவில் முன்னிலை வகிக்கின்றன.
அதேவேளையின், தனிமனித பாதுகாப்பில் சிறந்து விளங்குவதில் இந்தியாவிலேயே சென்னை முதலிடம் வகிக்கிறது. பாதுகாப்பு அம்சங்களில், உலக அளவில் சென்னை 108-வது இடத்தில் உள்ளது.
இப்பட்டியலில் பெங்களூரு 117-வது இடத்திலும், டெல்லி, கொல்கத்தா ஆகிய இரு நகரங்களும் 127-வது இடத்திலும் உள்ளன. மும்பை 142-வது இடத்தை பிடித்துள்ளது.
தனிமனித பாதுகாப்பில் லக்ஸெம்பர்க், பெர்ன், ஹெல்சிங்கி, சூரிச், வியன்னா மற்றும் ஜெனீவா ஆகிய நகரங்கள், உலக அளவில் முன்னிலை வகிக்கின்றன.
உள்ளூர் பாதுகாப்பு, குற்ற அளவுகள், சட்டம் - ஒழுங்கு உள்ளிட்டவற்றை கருத்தில்கொண்டு, தனிமனித பாதுகாப்புக்கு ஏற்ற நகரங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன.